பாதுகாப்பான அஸ்திவார அமைப்பு

குழிகள் சற்று அகலமாக எடுக்கப்பட்டு பில்லர் அல்லது சுவர் அமைக்கப்பட்ட பிறகு அவற்றை சுற்றிலும் மண் நிரப்பப்பட்டு, உறுதியாக இருக்குமாறு செய்யப்படும்.

Update: 2021-04-02 22:47 GMT
கட்டிடங்களுக்கான அஸ்திவார கட்டமைப்பு பணிகளில், குழிகள் சற்று அகலமாக எடுக்கப்பட்டு பில்லர் அல்லது சுவர் அமைக்கப்பட்ட பிறகு அவற்றை சுற்றிலும் மண் நிரப்பப்பட்டு, உறுதியாக இருக்குமாறு செய்யப்படும். அதற்கான பணிகளில் கருங்கல் உடைதூள் எனப்படும் ‘குவாரி டஸ்ட்’ பயன்படுத்தினால், எதிர்காலத்தில் கரையான் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ‘ஸ்டோன் கிரஷர் டஸ்ட்’ என்றும் சொல்லப்படும் கருங்கல் உடை தூளானது ஈரத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இல்லாதது. அதன் காரணமாக, செடிகள் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை. அஸ்திவார சுவர்களுக்கு இரு புறங்களிலும் அதை நிரப்பி, குழிகள் மூடப்பட்டால் பல விதங்களில் பாதுகாப்பாக இருக்கும். செலவு குறைவாக உள்ள இந்த முறையில் கட்டிட பணிகள் முடிவடைந்து, சில காலம் கழித்து மேற்கொள்ளக்கூடிய பராமரிப்பு பணிகள் பெருமளவு குறைந்து விடும் என்று கட்டுமான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகள்