சொத்து வாங்குவதற்கு முன் பெற வேண்டிய உறுதிமொழிகள்

கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றியும் கவனத்தில் கொள்வது அவசியம் என்று சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.;

Update:2021-08-07 05:02 IST
அசையா சொத்துக்களை வாங்கும் முன்னர் கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சம்பந்தப்பட்ட சொத்து குறித்து பல்வேறு உறுதி மொழிகள் அளிக்க வேண்டும். அவற்றுடன் கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றியும் கவனத்தில் கொள்வது அவசியம் என்று சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அவை...

1. தானம், அடமானம்,

2. முன் கிரயம், முன் அக்ரிமெண்டு,

3. உயில், செட்டில்மெண்டு,

4. கோர்ட் சம்பந்தம் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி, சிவில், கிரிமினல் வழக்குகள்,

5. ரெவின்யூ அட்டாச்மெண்டு,

6. வாரிசு பின் தொடர்ச்சி, சொத்து சம்பந்தமான வாரிசு உரிமை, மைனர் சொத்து,

7. சொத்து ஜாமீன், வங்கி கடன்கள் மற்றும். தனியார் கடன்கள்,

8. சர்க்கார் நில ஆர்ஜிதம், நில கட்டுப்பாடு,

9. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ், நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,

10. பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இடம் பெறவில்லை.

மேலும் செய்திகள்