குளியலறைகள் உலர்வாக வைத்திருப்பது அவசியமா?

குளியலறை மற்றம் கழிவறைகள் கட்டாயம் உலர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கான சில காரணங்கள்:-

Update: 2021-10-23 04:50 GMT
வீட்டிலுள்ள அனைத்து அறைகளையும் போல அதிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அறை குளியலறை மற்றும் கழிவறையாகும். மேல்நாடுகளில் இவ்விரண்டு அறைகளும் எப்பொழுதும் தண்ணீர் படாமல் காய்ந்த நிலையிலேயே இருப்பதைப் பார்க்க முடியும். இவ்வாறு உலர்ந்த நிலையிலிருக்கும் குளியலறை மற்றும் கழிவறைகளால் நோய்கள் அதிகம் பரவுவதில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

அவ்வாறு உலர்ந்த நிலையில் குளியலறை மற்றும் கழிவறைத் தரைகளை வைத்துக் கொள்வது எவ்வாறு?

குளியலறை மற்றம் கழிவறைகள் கட்டாயம் உலர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கான சில காரணங்கள்:-

எப்பொழுதுமே ஈரமாக இருக்கும்பொழுது அவை ஒரு விரும்பத்தகாத வாசனையைத் தருகின்றன. நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, நம் வீட்டிற்கு வருகை தருபவர்கள் இந்த அறைகளை உபயோகிக்கும் பொழுது மோசமான தோற்றம் மற்றும் அனுபவத்தைத் தருகின்றன.

தரையானது ஈரமாகவே இருக்கும் பொழுது அறையின் மூலை மற்றும் வாளிகளைச் சுற்றியுள்ள இடங்களில் பாசிகள் உருவாகி அவை நிரந்தரமான கறையை ஏற்படுத்துகின்றன.

நாம் வழக்கமாக குளியலறை மற்றும் கழிவறைகளுக்குச் செல்லும் பொழுது காலனிகளை அணிந்து செல்கின்றோம். தரை ஈரமாக இருக்கும் பட்சத்தில் நாம் ஈரத்தில் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், காலணிகள் ஈரத்தில் படும்பொழுது தூசிகளுடன் கூடிய கால் தடங்கள் அனைத்து இடத்திலும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் குளியலறைத் தரைகளை நேர்த்தியாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்வது அவசியமாகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் குளியலறைக்குள்ளேயே கழிவறையும் இருக்கின்றது.

குளியலறையை உலர்வாக வைத்திருக்க சில வழிமுறைகள்:-

குளியலறை என்பது காற்றோட்டம் மற்றும் வெளிச்சமுள்ள அறையாக இருக்க வேண்டும். பல வீடுகளில் குளியலறை கள் இருட்டான ஒன்றாகவே இருக்கும். குளியலறையில் ஜன்னல் வைக்க வசதியில்லாத பட்சத்தில் எக்சாஸ்ட் ஃபேன் பொருத்திக் கொள்வது நல்லது. இவை குளியலறையில் இருக்கும் துர்நாற்றத்தை நிமிடங்களில் வெளியேற்றுகின்றது. அதேபோல், குளியலறைகளில் தேவையான அளவு வெளிச்சம் தரும் பல்புகளை பொருத்துவதால் குளியலறைகளைச் சுத்தம் செய்யும் பொழுது இரண்டு இடுக்கிலிருக்கும் அழுக்கையும் அடித்து துரத்திவிட முடியும். அழுக்குகள் இல்லையென்றால் தரையும் எளிதில் உலர்வாகிகிடும்.

குளியலறைகளை எப்பொழுதுமே இறுக்கமாக மூடி வைத்தே இருக்க வேண்டும் என்ற அவசியமிலலை. குளியலறைகளை சிறிது திறந்த நிலையில் வைக்கும் பொழுது அவை எளிதில் உலர்ந்து நேர்த்தியாகக் காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அதிக பயனளிக்கக் கூடிய துப்புரவு தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலமும் கட்டாயம் குளியலறைகளை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக் கொள்ள முடியும். அதிக பயனளிக்கக்கூடிய பவுடர்கள் மற்றும் திரவங்கள் தரைகள் மற்றும் சுவர் டைல்களில் படிந்திருக்கும் அழுக்குகளை விரைவில் நீக்கி விடுகின்றன. நீராவி மாய்ஸ் மற்றும் கிரௌட் கிளீனர்கள் போன்ற துப்புரவு கருவிகள் உங்கள் தரைகளை உண்மையிலேயே கிருமி நீக்கம் செய்து அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

குறிப்பிட்ட இடைவெளியில் குளியலறைகளை சுத்தம் செய்து வைத்துக் கொண்டால், என் குளியலறையில் என்று பெருமையாகப் பாடக்கூடிய வாய்ப்பைப் பெறலாம். நாம் அனைவரும் குளியலறையைப் பயன்படுத்திய பிறகு அதனைக் கழுவி மாப் கொண்டு துடைத்து விட்டு குளியலறையைத் திறந்து விட்டால் பத்து நிமிடங்களுக்குள்ளேயே உலர்ந்த, சுத்தமான குளியலறை தயாராகிவிடும்.

குளியலறைக்குள் உபயோகப்படுத்தக் கூடிய கால் மிதியடிகள், துண்டுகள் மற்றும் துடைக்கப் பயன்படுத்தக் கூடிய துணிகளை அடிக்கடி துவைத்து உலர்த்தி பயன்படுத்துவதன் மூலம் ஈரமான வாசனையைத் தவிர்க்க முடியும். தரைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை வைப்பர்கள் கொண்டு தள்ளுவதோடு மாப் வைத்து துடைத்தோமானால் எப்பொழுதுமே தரையானது உலர்வாகக் காட்சியளிக்கும்.

மேலும் செய்திகள்