அவரவர் தேவை வசதிகேற்ற விதவிதமான பூஜை அறைகள்

Update: 2023-04-22 01:35 GMT

அனைத்து வீடுகளிலும் பூஜை அறை என்பது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அவரவர் வீடுகளின் அமைப்புக்கு ஏற்றவாறு வசதிகேற்ப பூஜை அறைகள்அமைக்கின்றனர். தனியறையாகவோ சமையலறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ அமைத்துக் கொள்கிறார்கள்.

பூஜை அறைகள் கிழக்கு திசை பார்த்து அல்லது வடகிழக்கு திசை நோக்கி அமைத்தல் வேண்டும். பூஜை அறைக்குள் காற்றோட்டம் சூரிய வெளிச்சம் வரும் படி அமைக்க வேண்டும். பெரிய தனி வீடுகளில் தனியான பூஜை அறைகள் வைத்துள்ளனர்.

நவீன காலத்தில் பல அடுக்கு மாடி கட்டடங்கள் முறையில் வீடுகள் கட்டப்படுவதால் தனி அறையை பூஜை அறையாக வைப்பது சற்று இயலாத காரியம். ஆதலால் வரவேற்பு அறையில் பெரும்பாலும் செல்ஃபிலோ மரத்தாலான பீரோ போன்ற அமைப்பிலோ பூஜை அறைகள் வடிவமைக்கப்படுகிறது.

இன்றைய காலத்தில் பலவித வடிவங்களில் பூஜை அறைகள் உருவாக்கப்படுகிறது. கண்ணாடி சுவர் போன்று தடுப்புகள் அமைத்து பூஜை அறையாக மாற்றப்படுகிறது. சுவருடன் ஒட்டி மரத்தாலோ கண்ணாடியாலோ அழகாக அமைக்கப்படுகிறது.

வால்பேப்பர் டிசைன்கள் அமைத்தும் புதுவிதமான பூஜை அறைகள் உள்ளது. கோபுரம் போன்ற அமைப்பில் மரத்தால் ஆன சிறு மணிகள் தொங்கவிடப்பட்டு தனி பூஜை அறைகளும் தயாரிக்கப்படுகிறது. இதை நாம் தேவையான போது திறக்கவும் மற்ற நேரங்களில் மூடி வைத்துக் கொள்ள வசதியாக உள்ளது.

வெள்ளை நிறத்திலும் வெளிர்மஞ்சள் நிறத்திலும் பலவித டிசைன்களில் நவீன காலத்தில் பூஜை அறைகள் தயாரிக்கப்படுகிறது. பூஜை செய்வதற்கான பொருள்களை பூஜை அறையிலையே வைத்துக் கொள்ளும்படி டிராக்கள் வசதியுடன் கூடிய அலமாரி போன்றும் வடிவமைக்கப்படுகிறது.

வெள்ளை நிற மார்பில் சுவர்களைக் கொண்ட பூஜை அறைகளும் உண்டு. 2 மற்றும் 4 ட்ராயர்களுடன் கூடிய சுவரில் பொருத்தப்பட்ட அலமாரிகள் முறையிலும் பூஜை அறைகள் அமைக்கப்படுகிறது. சில தனி வீடுகளில் கருப்பு மார்பில் கொண்டு அமைக்கப்பட்ட பூஜை அறைகளும் உள்ளன.

சாப்பாட்டு அறையிலும் சுவற்றுடன் பொருந்திய அலமாரி போன்ற பூஜை அறைகளும் உள்ளது. பூஜை அறையில் மேலிருந்து கீழாக விளக்குகள் , மணிகள் தொங்கவிடப்படும் பூஜை அறைகள் சுவற்றுடன் அலங்கரிக்கப்படுகிறது.

சுவரில் தாமரை வடிவமைப்பு கொண்ட பூஜை அறைகளும் அமைக்கப்படுகிறது. மரத்தாலான அலமாரிகள் கண்ணாடியால் ஆன கதவுகள் கொண்டு மூடப்பட்டு இருக்கும். இதுபோன்ற வடிவமைப்பிலும் பூஜை அறைகள் உள்ளது.

பெரும்பாலும் இருபுறமும் கதவுகள் மூடும் படியாக உள்ள அலமாரிகள் பயன்படுத்தப்படுகிறது. பூஜை அறைகளை பூஜை முடிந்தவுடன் கதவுகள் மூடப்பட்டு இருக்கும்வகையிலே அனேகமாக அமைக்கப்படுகிறது.

பூஜை அறைகள் தனி அறையாக இருக்கும் போது பெரிய பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பூக்கள் வைத்து அலங்கரித்தால் மிக அழகாக இருக்கும்.

அனைத்து வீடுகளிலும் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப இடத்திற்கு ஏற்ப பூஜை அறைகள் தனியாகவோ சுவற்றில் அடிக்கப்பட்ட அமைப்பிலோ உருவாக்கப்படுகிறது.

பூஜை அறைகள் இருந்தால்தான் வீடுகள் முழு நிறைவை அடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்