பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு அவங்க 2 பேர்தான் காரணம் - சஞ்சு சாம்சன் பாராட்டு

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

Update: 2024-05-23 10:05 GMT

image courtesy:AFP

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், "வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றுதான் எப்பொழுதுமே சில நல்ல தருணங்களும் இருக்கும். சற்று மோசமான தருணமும் இருக்கும். அந்த வகையில் கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில் எதிரணியில் உள்ள சிறப்பான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல முறையில் பந்துவீசி இந்த வெற்றியை பெற்று தந்துள்ளனர். எங்களது அணியில் பயிற்சியாளர்களான சங்ககாரா மற்றும் ஷேன் பாண்ட் ஆகியோர் நிச்சயம் வீரர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறார்கள். அவர்கள்தான் வெற்றிக்கு காரணம். அஸ்வின் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒருபுறம் சிறப்பாக செயல்படும் வேளையில் ரியான் பராக், ஜெயிஸ்வால் போன்ற இளம் வீரர்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்