நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மழையால் பாதிப்பு: தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது.

Update: 2017-03-25 22:45 GMT

ஹாமில்டன்,

மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி காலதாமதமாக ஆரம்பமானது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் புரூன் ரன் எதுவும் எடுக்காமலும், டீன் எல்கர் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய டுமினி 20 ரன்னும், ஹமிம் அம்லா 50 ரன்னும் சேர்த்து அவுட் ஆனார்கள். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழை பலமாக பெய்ததால் நேற்றைய ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 33 ரன்னுடனும், பவுமா 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, கிரான்ட்ஹோம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்