ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 2-வது வெற்றி

16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

Update: 2018-01-18 20:30 GMT
லிங்கான்,

16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் (102 ரன்) சதத்தின் உதவியுடன் 29.3 ஓவர்களில் எட்டியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கனடா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை வென்றது. ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து அணி தனது கடைசி லீக்கில் கனடாவை நாளை எதிர்கொள்கிறது.

‘பி’ பிரிவில் 2 வெற்றிகளுடன் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்