எட்டு விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் லாயிட் போப் சாதனை

ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லாயிட் போப் சாதனை படைத்தார். #U19CWC #ENGvAUS #LloydPope

Update: 2018-01-23 05:33 GMT
19 வயதுக்குட்பட்டோருக்கான, ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன் படி களமிறங்கிய அந்த அணி,33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சங்கா மட்டும் அதிகப்பட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இளம் சுழற்பந்துவீச்சாளர் லாயிட் போப் கிறங்கடித்தார். அந்த அணி, 23.4 ஓவர்களில் 96 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. போப் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இது சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருது லாயிட் போப்புக்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்