ஸ்டீவன் சுமித் தந்தையின் கோபம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீன் சுமித்தின் தந்தை பீட்டர், மகனின் விளையாட்டு உபகரணங்களை தூக்கியெறிந்து தன் கோபத்தை வெளிபடுத்திவுள்ளார்.

Update: 2018-04-01 22:19 GMT




சிட்னி,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீன் சுமித், ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய போது, அவரது தந்தை பீட்டர் கோபத்தில் இருந்துள்ளார். ஊடகத்தினரை சந்திக்க மறுத்த பீட்டர், ‘ஸ்டீவன் சுமித் விரைவில் சரியாகி விடுவார். அவர் கிரிக்கெட் உலகில் தொடர்ந்து நிலைத்து நிற்பார். நீங்கள் போகலாம்’ என்று கோபமாக கூறியுள்ளார். அத்துடன் காரில் இருந்த ஸ்டீவன் சுமித்தின் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பேக்கை எடுத்த பீட்டர், அதை பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறையில் தூக்கி வீசிவிட்டு கோபமுடன் வீட்டுக்குள் சென்றார். இந்த தகவல்களை அங்குள்ள சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்