அடுத்த 5 ஆண்டு நடக்கும் கிரிக்கெட் போட்டி - டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ரூ.4,442 கோடிக்கு கேட்ட நிறுவனம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டு நடக்கும் கிரிக்கெட் போட்டியின் டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை பெற ஆன்-லைன் மூலம் ஏலம் நடந்து வருகிறது.

Update: 2018-04-03 22:45 GMT
மும்பை,

இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளூரில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கான (ஐ.சி.சி. போட்டிகளை தவிர்த்து) டி.வி.யில் நேரடி ஒளிபரப்பும் செய்யும் உரிமம் முதல்முறையாக ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 102 சர்வதேச போட்டிகள் (மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து) இந்தியாவில் நடக்க இருக்கிறது.

ஆன்-லைன் ஏலம் நேற்று தொடங்கியது. ஸ்டார் குழுமம், சோனி மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிறுவனங்கள் மாறி மாறி தொகையை உயர்த்திய வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிறுவனம் ரூ.4,442 கோடிக்கு கேட்டதுடன் முதல் நாள் ஏலம் முடிவுக்கு வந்தது. இந்த விலையில் இருந்து இன்றும் ஏலம் தொடரும்.

இதற்கு முந்தைய 5 ஆண்டுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ.3,851 கோடிக்கு தான் பெற்றிருந்தது. இந்த முறை அதை விட மிக அதிக தொகை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைக்கப்போகிறது.

மேலும் செய்திகள்