ICC உலகக் கோப்பை 2019: இந்தியா Vs பாகிஸ்தான் மற்றும் மற்ற போட்டி டிக்கெட் விலை விவரங்கள்

ICC உலகக் கோப்பை 2019: இந்தியா Vs பாகிஸ்தான் மற்றும் மற்ற போட்டி டிக்கெட் விலை விவரங்கள் வெளியாகி உள்ளன. #ICCWorldCup2019 #IndiavsPakistan

Update: 2018-04-27 09:48 GMT

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.  உலக கோப்பை போட்டி நடக்க குறைந்தது  400 நாட்கள் உள்ளன. இந்த போட்டிகளுக்கான அட்டவணை  கொல்கத்தாவில் நடந்த ஐசிசி குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.

போட்டிகள்  மட்டுமல்ல மற்றும் போட்டி நடைபெறும் மைதாங்களும்  உறுதி செய்யப்பட்டு விட்டன. அதேபோல்  டிக்கெட் விலைகள் முடிவு செய்யப்பட்டு விட்டன.

எப்போதும் போல், எதிர்வரும் உலக கோப்பை போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்  மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஜூன் 16 அன்று ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவிருக்கும் போட்டியில் ஹவுஸ்புல்லாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் விலை பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிளாட்டினம் டிக்கெட் விலை 235 பவுண்ட்  இது இந்திய பணத்தில்   ரூ 21, 833 க்கு சமமானதாகும்.

அதேசமயம், வெண்கலப் பிரிவில் 70 பவுண்ட்  (ரூ 6503) குறைவாக இருக்கும். இது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வேறுபட்ட விலையில் டிக்கெட் உள்ளது.

தங்கம் குழந்தைகள்  பிரிவில் 30 பவுண்ட்  (ரூ 2787) விலையாகும், வெண்கல பிரிவில் 6  பவுண்ட் (ரூ 557) விலையாகும்.

இதற்கிடையில், இறுதியாக  டிக்கெட் விலைகள்   உயர்த்தப்படலாம்  அப்போது  டிக்கெட் விலை 395 பவுண்ட்  (ரூ. 36, 688), பெரியவர்களுக்கான குறைந்த பட்ச  டிக்கெட்  95 பவுண்ட் (ரூ 8823) ஆகும்

ஜூன் 5 ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக கோப்பையை இந்தியா வென்றது.



இந்தியா ஜூன் 5 ம் தேதி தென் ஆப்ரிக்கா எதிராக தங்கள் உலக கோப்பை பிரச்சாரம் துவங்கி விடும்.

மேலும் செய்திகள்