கிரிக்கெட்
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டீட் நியமனம்

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெஸ்சன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரரான கேரி ஸ்டீட் நேற்று நியமிக்கப்பட்டார்.

46 வயதான கேரி ஸ்டீட்டின் ஒப்பந்த காலம் 2 ஆண்டுகள் ஆகும். அக்டோபர் மாதம் இறுதியில் நியூசிலாந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதில் இருந்து கேரி ஸ்டீட்டின் பயிற்சியாளர் பணி தொடங்கும்.