ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-12-04 21:15 GMT
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துறுதுறுவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்த போது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

‘லெக்-ஸ்பின்னர்’ ஆக வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது உடல்நிலையையும், கிரிக்கெட் ஆவலையும் தனியார் அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவனை தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. மெல்போர்னில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி வரை ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சி உள்ளிட்ட விஷயங்களில் ஜாலியாக நேரத்தை செலவிடுவான். தனது சுழற்பந்து வீச்சால் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே இந்த சிறுவனின் மிகப்பெரிய ஆசையாகும்.

மேலும் செய்திகள்