ஆரம்பத்தில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது அதனால்... - திலக் வர்மா

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார்.

Update: 2024-05-07 09:37 GMT

Image Courtesy: X (Twitter) 

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை வீரர் திலக் வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்பத்தில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் நாங்கள் இருவருமே தடுமாறினோம். எனவே நாங்கள் நேராக பேட்டிங் செய்ய முயற்சித்தோம்.

எங்களிடம் 360 டிகிரி பேட்ஸ்மேன் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். எதையும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. இந்த பெரிய சீசனில் நாங்கள் பல்வேறு பிட்ச்களை பார்த்து வருகிறோம். எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் விளையாட முயற்சித்தேன். ஆனால் அதிரடியை கைவிடவில்லை.

அந்த வகையில் நான் நன்றாக பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் நன்றாக பேட்டிங் செய்தார். எனவே அவர் சதமடிப்பதற்கு தகுதியானவர் என்று நினைத்தேன். அதனால் பெரிய ஷாட்டுகளை அடிக்காத நான் சிங்கிள் மட்டுமே எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க விரும்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்