தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக டீன் எல்கர் நியமனம்

தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக டீன் எல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-01-09 22:15 GMT
ஜோகன்னஸ்பர்க்,

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது தென்ஆப்பிரிக்க அணி மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தார்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்டுக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலது கால் தொடையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் அவதிப்படுவதால், அதை கருத்தில் கொண்டு புதுமுக பேட்ஸ்மேன் பீட்டர் மாலன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்