புலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது

காஷ்மீரின் புலவாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-03-23 23:15 GMT
சென்னை,

வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.20 கோடி நலநிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியில் இந்த தொகை பிரித்து கொடுக்கப்பட்டது. இதன்படி இந்திய ராணுவத்துக்கு ரூ.11 கோடி, மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ரூ.7 கோடி, இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா ரூ.1 கோடி வீதம் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் ஐ.பி.எல்.-ன் தொடக்க ஆட்டத்தில் டிக்கெட் மூலம் கிடைத்த வருமானத்தை நலநிதியாக வழங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த வகையில் ரூ.2 கோடியை சென்னை அணியின் கேப்டன் டோனி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி எஸ்.இளங்கோவிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்