பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயமடைந்தார்.

Update: 2019-05-24 23:34 GMT
லண்டன்,

பயிற்சி கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் பேட்டிங் பயிற்சி எடுத்த போது காயமடைந்தார். பயிற்சி பவுலர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசிய பந்து அவரது வலதுகையை வேகமாக தாக்கியது. இதனால் அவர் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் தான்.

இதற்கிடையே, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு பீல்டிங் பயிற்சியின் போது இடது கை ஆள் காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்