இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் விராட் கோலி அளவுக்கு அதிகமாக அடிக்கடி அப்பீல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Update: 2019-06-23 21:30 GMT

சவுதம்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் விராட் கோலி அளவுக்கு அதிகமாக அடிக்கடி அப்பீல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக 29–வது ஓவரில் எல்.பி.டபிள்யூ. முடிவில் நடுவர் அலீம் தருடன் நேருக்கு நேர் ஆக்ரோ‌ஷமாக விவாதித்தது சர்ச்சையை கிளப்பியது. அவரது செயல், ஐ.சி.சி. வீரர்களின் நடத்தை விதிமீறல் ஆகும். இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் ஒழுங்கீன நடவடிக்கையாக ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அவருக்கு விதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதும் அவர் ஒரு தகுதி இழப்பு புள்ளி பெற்றார். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 4 அல்லது அதற்கு மேல் தாண்டினால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் அல்லது இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட கோலிக்கு தடை விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்