டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Update: 2019-08-06 13:35 GMT
திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 24-லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி 5 போட்டிகளிலும் தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்