இந்திய வீரர் முகமது ஷமி நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-02 14:53 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை  முன் வைத்தார். அதுமட்டுமல்லாது கொல்கத்தா காவல் நிலையத்தில் புகாரும் ஹசின் ஜஹான் அளித்திருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முகமது ஷமி மறுத்திருந்தார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது தொடர்பான வழக்கு  அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,  ஹசின் ஜஹான் தொடர்ந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் கொல்கத்தா நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராக வேண்டும் எனவும், மேலும் முகமது ஷமி 15 நாட்களுக்குள் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்யவும்  காவல் துறைக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்