பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் மரணம்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் மரணம் அடைந்தார்.

Update: 2019-09-07 03:04 GMT
லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அப்துல் காதிர் நேற்று மாரடைப்பு காரணமாக லாகூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்டுகளில் விளையாடி 236 விக்கெட்டுகளும், 104 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். 

1987-ம் ஆண்டு லாகூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். 1983 மற்றும் 1987-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்தார். 

ஷேன் வார்னேவின் ஆலோசகராகவும் செயல்பட்டார். அவரது மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்