கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: பேட்டிங் வரிசை குழப்பம் குறித்து விராட்கோலி பதில்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குழப்பம் குறித்து விராட்கோலி பதில் அளித்துள்ளார்.

Update: 2019-09-23 23:12 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 ஓவர்களுக்குள் களம் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வீரராக களம் இறங்க வேண்டும் என்றும், 10-வது ஓவருக்கு பிறகு களம் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானால் ரிஷாப் பண்ட் 4-வது வீரராக களம் இறங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 7.2 ஓவர்களில் 2-வது விக்கெட் வீழ்ந்தது. அறிவுரைக்கு மாறாக 4-வது வீரராக ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். இந்த பேட்டிங் வரிசை குழப்பம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியிடம் கேட்ட போது பதில் அளிக்கையில், ‘தகவல் பரிமாற்றத்தை தவறாக புரிந்து கொண்டதால் இந்த தவறு நடந்ததாக உணருகிறேன். 10 ஓவருக்கு முன்பு என்றால் ஸ்ரேயாஸ் அய்யரும், 10 ஓவருக்கு பிறகு என்றால் ரிஷாப் பண்டும் களம் இறங்க வேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் சொல்லி இருந்தார். இதில் 2 பேரும் குழப்பம் அடைந்து விட்டனர். ஒரே சமயத்தில் ரிஷாப் பண்டும், ஸ்ரேயாஸ் அய்யரும் களம் இறங்கி இருந்தால் வேடிக்கையாக இருந்து இருக்கும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்