அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் தடுமாற்றம்

ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

Update: 2024-04-30 14:14 GMT

லக்னோ,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 48வது லீக் ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சூர்யகுமார் யாதவ் (10), திலக் வர்மா (7), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (0), அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்