நாங்கள் கொஞ்சம் வேகமாக சேசிங் செய்திருக்கலாம் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-30 20:59 GMT

Image Courtesy: X (Twitter)

லக்னோ,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன், டிம் டேவிட் 35 ரன் எடுத்தனர். லக்னோ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களான டிம் டேவிட் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரில் ஹல்க் என்னும் பெயர் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது என்று இப்போட்டியின் போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டோய்னிஸ் என்றே பெரும்பாலான ரசிகர்கள் வாக்களித்தனர்.

இது பற்றி இப்போட்டியின் முடிவில் ஸ்டோய்னிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தப் பெயரை நான் நீண்ட காலமாக கொண்டுள்ளேன். டிம் டேவிட் கொஞ்சம் அதிக முடியுடன் பெரிய கால்களை கொண்டுள்ளார். புதிய பந்தில் 3 ஓவர்களை பவர் பிளேவில் வீசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பந்து வீசியது நன்றாக இருந்தது. பிட்ச் ஓரளவு நன்றாக இருந்தது.

இருப்பினும் அது ஸ்லோவாகும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் கொஞ்சம் வேகமாக சேசிங் செய்திருக்கலாம். கடைசி நேரத்தில் விழுந்த விக்கெட்டுகளுக்கு மத்தியில் 8 - 10 பந்துகளில் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் இன்னும் எளிதாக வென்றிருப்போம். அதே போல பேட்டிங்கில் கடினமாக வேலை செய்த நான் கடைசியில் சுமாராக அவுட்டாகி மற்றவரிடம் வேலையை கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது.

இந்த அணியில் இது எனக்கு மூன்றாவது வருடமாகும். இங்கு முதல் நாளிலிருந்து நான் தொடர்ந்து இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இங்கே சிலருடன் நெருக்கமான நட்பை உருவாக்கியுள்ளேன். நல்ல கிரிக்கெட்டை விளையாடும் எங்களுக்கு அனைத்தும் நன்றாக அமைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்