மெல்போர்னில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ரத்து - அபாயகரமான ஆடுகளத்தால் நடுவர்கள் நடவடிக்கை

அபாயகரமான ஆடுகளத்தால், மெல்போர்னில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியை நடுவர்கள் ரத்து செய்தனர்.

Update: 2019-12-08 23:18 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட்டில் விக்டோரியா-மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஷான் மார்ஷ் தலைமையிலான மேற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்த போது, பந்து சீரற்ற வகையில் அவ்வப்போது தாறுமாறாக எகிறியதுடன் பேட்ஸ்மேன்களையும் பதம் பார்த்தது. வீரர்களின் புகாரின் பேரில் ஆட்டத்தை பாதியில் நிறுத்திய நடுவர்கள், ரோலர் கொண்டு ஆடுகளத்தை சமப்படுத்தும்படி உத்தரவிட்டனர்.

எனவே 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்தை பார்வையிட்ட நடுவர்கள், ஆடுகளத்தன்மை தொடர்ந்து அபாயகரமான நிலையில் இருப்பதாக கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்த போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதே மைதானத்தில் தான் வருகிற 26-ந்தேதி ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே ‘பாக்சிங்டே’ டெஸ்ட் போட்டி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்