கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது - விராட் கோலி

கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-04 15:44 GMT
வெல்லிங்டன்,

41 வயதான கோப் பிரையண்ட் மற்றும் அவரது 13 வயது மகள் ஜியானா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். சர்வதேச அளவில் இந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  இன்று  கோப் பிரயண்டுக்கு அஞ்சலி செலுத்தினார்.  அதனை தொடர்ந்து ஹாமில்டனில்  செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:-

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. சிறுவயதில் கோப் பிரயண்ட் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் கண்டு வளர்ந்தேன். பல தருணங்களில் எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

மனதிற்கு பிடித்த கோப் பிரையண்ட்டின் மரணம், வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் அதன் நிலையற்ற தன்மையை தனக்கு உணர்த்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்