இந்திய வீரரின் முதல் முச்சதம்: நினைவூட்டிய ஐ.சி.சி.

இந்திய வீரர் சேவாக்க் அடித்த வரலாற்றின் முதல் முச்சதம் குறித்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Update: 2020-03-30 00:34 GMT
துபாய், 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் யார் என்றால், அது முன்னாள் அதிரடி சூரர் ஷேவாக் தான். 2004-ம் ஆண்டு முல்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 39 பவுண்டரி, 6 சிக்சருடன் 309 ரன்கள் (375 பந்து) குவித்து உலக சாதனை படைத்தார்.

அவர் முச்சதம் நொறுக்கிய நாள் மார்ச் 29-ந்தேதி. அதை நேற்று நினைவூட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேவாக் புகைப்படத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பதிவிட்டுள்ளது. ஷேவாக்கின் முச்சதத்தால் அந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. சரியாக அடுத்த 4 ஆண்டுகளில் இதே மார்ச் மாதம் சென்னையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஷேவாக் (42 பவுண்டரி, 5 சிக்சருடன் 319 ரன்) மீண்டும் ஒரு முச்சதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்