20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது - மார்க் டெய்லர்

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-17 22:30 GMT

* காஷ்மீரை காப்போம் என்று தலைப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு இந்திய முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘நமது தேசம் குறித்தும், நமது பிரதமர் குறித்தும் அப்ரிடி தேவையில்லாமல் பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. அப்ரிடியுடன் இனி நட்புறவு கிடையாது. அவரது அறக்கட்டளைக்கு நிதி உதவி அளிக்கும்படி விடுத்த வேண்டுகோளுக்காக வருந்துகிறேன்’ என்று ஹர்பஜன்சிங் சாடியுள்ளார்.

* ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் 15 அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதன் பிறகு 45 ஆட்டங்கள் 7 இடங்களுக்கு பயணிப்பது எல்லாம் இந்த சூழலில் மிகவும் சிரமம். அதிலும் 2 வாரங்கள் தனிமைப்படுத்துவது என்பது இன்னும் கடினம். எனவே திட்டமிட்டபடி இந்த போட்டி நடக்காது என்றே தெரிகிறது. இந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி. தள்ளிவைத்தால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்பு உருவாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்