பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 219 ரன்னில் சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 219 ரன்னில் சுருண்டது.

Update: 2020-08-07 22:47 GMT
மான்செஸ்டர், 

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (151 ரன்) சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்களுடன் தடுமாறியது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று பாகிஸ்தானின் பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆலிவர் போப் 62 ரன்களும், ஜோஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஷதப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 36 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் செய்திகள்