ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Update: 2020-11-01 14:04 GMT
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். தலா 6 வெற்றி, 7 தோல்வி என்று ஒரே நிலைமையில் உள்ள இவ்விரு அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். தோற்கும் அணி வெளியேறும். இவர்களின் ரன்ரேட் மோசமாக இருப்பதால் மெகா வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். 

மேலும் செய்திகள்