பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 145 ரன் தேவை

ஷுப்மான் கில் சிறப்பான விளையாடி 91 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு கடைசி செசனில் 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பாக செல்கிறது.

Update: 2021-01-19 05:21 GMT
பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு 428 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று காலை மதிய உணவு இடைவேளைக்கு முன் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 64 ரன்னுடனும், புஜாரா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடைசி செசனில் இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது. புஜாரா- ரிஷப் பண்ட் ஜோடி வெற்றிக்காக போராடும். இந்த ஜோடி பிரிந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும். கடைசி செசன் பரபரப்பாக இருக்கும்.

மேலும் செய்திகள்