கான்பூர் டெஸ்ட் இரண்டாம் நாள் : தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்து அணியில் வில் யங் 46 ரன்களும் ,டாம் லாதம் 23 ரன்களும் எடுத்துள்ளனர்.

Update: 2021-11-26 09:03 GMT
 கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75  ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக  இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களும் , சுப்மன் கில் 52 ரன்களும் ,ஜடேஜா  50 ரன்களும் ,அஸ்வின் 38   ரன்களும் எடுத்தனர் .

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில்  நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளை வரை 26 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி  72 ரன்கள் எடுத்துள்ளது.    நியூசிலாந்து அணியில்  வில் யங் 46 ரன்களும் ,  டாம்  லாதம்  23 ரன்களும் எடுத்துள்ளனர்  .

மேலும் செய்திகள்