ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அதிவேக சதமடித்து சாதனை

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.;

Update:2021-12-10 06:46 IST
பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மிடில் வரிசையில் களம் கண்டு நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்த அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஷஸ் வரலாற்றில் இது 3-வது அதிவேக சதமாகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு வீரரின் மின்னல்வேக சதமாக அமைந்தது. அத்துடன் உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக தனக்கு அணியில் இடம் கொடுத்தது சரியே என்றும் நிரூபித்து விட்டார்.

ஆஸ்திரேலிய வீரர் 27 வயதான டிராவிஸ் ஹெட் இந்த டெஸ்டில் 112  ரன்களை அவர் தேனீர் இடைவேளைக்கு பிறகில் இருந்து ஆட்டம் நேரம் முடிவுக்குள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஆஷஸ் டெஸ்டில் 1938-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே பகுதி நேரத்தில் (செசன்) அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை பெற்றார்.

மேலும் செய்திகள்