ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.

Update: 2021-12-30 14:03 GMT
ஷார்ஜா 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிலையில் இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில்   இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ்  வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக இந்திய அணியில்   ஷாயிக் ரஷீத் 90 ரன்கள் எடுத்தார் .

இதை தொடர்ந்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் தடுமாறியது .இதனால் வங்காளதேச அணி 38.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று யு19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்