ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டன் உள்பட 6 பேருக்கு கொரோனா

6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.

Update: 2022-01-19 20:01 GMT
கோப்புப்படம்
டிரினிடாட், 

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் டிரினிடாட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. 

இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத் மற்றும் ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனவ் பராக், சித்தார்த் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். 

6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடந்தது. இந்திய அணியை நிஷாந்த் சிந்து வழிநடத்தினார். ‘டாஸ்’ ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.

மேலும் செய்திகள்