இலங்கைக்கு எதிரான 2-வது டி20: 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Update: 2022-02-13 10:25 GMT
சிட்னி,

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 25 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மெக்டர்மோட் 18 ரன்களில் வெளியேறினார். 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஸ் இன்ங்லிஸ் 48 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டோஸ்னிஸ் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இறுதியில் அந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்