ஐபிஎல்: லக்னோவின் வெற்றிப்பயணம் நீடிக்குமா?

லக்னோவின் வெற்றிப்பயணம் சென்னை, ஐதராபாத், டெல்லி அணிகளை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.

Update: 2022-04-09 23:01 GMT
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 வெற்றி (ஐதராபாத், மும்பைக்கு எதிராக), ஒரு தோல்வி (பெங்களூருவுக்கு எதிராக) கண்டுள்ளது. அந்த அணியில் கவனிக்கத்தக்க வீரராக உள்ள ஜோஸ் பட்லர் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்ற அறிமுக அணியான லக்னோ, அதன் பிறகு சென்னை, ஐதராபாத், டெல்லி அணிகளை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் குயின்டான் டி காக் (2 அரைசதத்துடன் 149 ரன்), கேப்டன் லோகேஷ் ராகுல் (132 ரன்), தீபக் ஹூடோ (130 ரன்), இளம் வீரர் பதோனி (102 ரன்) கைகொடுக்கிறார்கள்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

மேலும் செய்திகள்