2-வது டி20: அயர்லாந்துக்கு பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்..? இன்று மோதல்
அயர்லாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy: twitter/@cricketireland
டப்ளின்,
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டப்ளின் நகரில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது. முந்தைய ஆட்டத்தின் தோல்விக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதேவேளையில் சொந்த மண்ணில் தொடரை வெல்ல அயர்லாந்து தீவிர முனைப்பில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.