3-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது.;

Update:2022-12-18 05:50 IST

image courtesy: England Cricket twitter

பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 44 ரன்கள் எடுத்தார். ஹீதர் நைட் 43 ரன்களும் லாரன் வின்ஃபீல்ட் ஹில் 23 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ரஷாதா வில்லியம்ஸ், திரிஷன் ஹோல்டர் இருவரும் களத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்