ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு காயம்
நாதன் லயன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது வலது பின்னங்காலில் காயமடைந்தார்.;
Image Courtesy : AFP
லண்டன்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வலது பின்னங்காலில் காயமடைந்தார்.
வலியால் அவதிப்பட்ட அவர் கைத்தாங்களாக வெளியே அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பவுலிங் செய்யவரவில்லை. நேற்று மைதானத்திற்கு ஊன்றுகோல் உதவியுடன் வருகை தந்த நாதன் லயன் களம் இறங்கவில்லை.
தற்போதைய நிலையில் அவரால் ஆஷஸ் தொடரில் எஞ்சிய டெஸ்டுகளில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 35 வயதான லயன் இதுவரை 122 டெஸ்டுகளில் ஆடி 496 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்த டெஸ்ட், அவர் தொடர்ச்சியாக விளையாடும் 100-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.