ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகப்பெரிய பின்னடைவு -ஜோஸ் பட்லர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

Update: 2023-10-16 20:22 GMT

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் நிருபர்களிடம் கூறுகையில்,

'ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அணியில் திறமையான நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எங்களால் சரிவில் இருந்து வலுவாக மீண்டு வர முடியும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலையை தவறாக கணித்து விட்டோம்.

இதே மைதானத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் விளையாடியது. ஆடுகளம் அதே போன்று தான் இருக்கும். பிற்பாதியில் பனியின் தாக்கத்தால் பேட்டிங் செய்வதற்கு எளிதாகி விடக்கூடும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தன்மை இல்லை' என்றார்.   

Tags:    

மேலும் செய்திகள்