டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற வேண்டும் - அம்பத்தி ராயுடு

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-04-16 14:18 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதுவரை அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோர் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.

கடந்த இரு ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை அவரது அதிரடி ஆட்டத்திற்காக மட்டுமின்றி அவரது அனுபவத்திற்காகவும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்கு நிகராக பினிஷிங் செய்யும் திறமையை கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு கடைசி முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவருடைய இளம் வயதிலிருந்தே எந்தளவுக்கு திறமையானவர் என்பதை நான் பார்த்து வருகிறேன். எப்போதும் எம்.எஸ். தோனியை போன்ற சாயலை கொண்ட அவருக்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது அவருக்கு கடைசி முறையாக இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே கார்த்திக்கை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என நான் கூறுகிறேன். தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஆனால் உலகக் கோப்பையில் இந்திய அணி வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் அங்கே அறிமுக வீரர்களையும் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் பார்க்க முடியாது என்பதால் பேட்டிங் சற்று அழுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்