முதலாவது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி...!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

Update: 2023-12-26 10:18 GMT

image courtesy; twitter/ @ICC

செஞ்சூரியன், 

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில் வந்த வேகத்திலேயே 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் பர்கர் கைப்பற்றினார்.

தற்போது வரை இந்திய அணி 72 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. விராட் கோலி 24 ரன்களிலும், ஐயர் 22 ரன்களிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்