என்னுடைய கிரிக்கெட் கேரியரில் நான் சந்தித்த கடினமான பவுலர் இவர்தான் - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர் 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

Update: 2023-12-30 20:35 GMT

image courtesy; AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இவர் 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2016-ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகள், 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 154 போட்டியில் பங்கேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கம்பீர் சேவாக்குடன் இணைந்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் எதிர்கொண்ட மிகக் கடினமான பந்துவீச்சாளர் யார் என கவுதம் கம்பீரிடம் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர் நான் விளையாடியதில் ஒரே ஒரு கடினமான பவுலர் என்றால் அது "முத்தையா முரளிதரன்" தான் என பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்