இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய டி20 அணியினருடன் டோனி...! வைரலாகும் புகைப்படங்கள்
முன்னாள் இந்திய கேப்டன் டோனி, இங்கிலாந்தில் உள்ள இந்திய டி20 அணியினரை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
image tweeted by @BCCI
எட்ஜ்பஸ்டன்,
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார். அவர் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுடன் உரையாடும் காட்சியை பிசிசிஐ தனது டுவீட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகமும் தனது டுவீட்டரில் பகிர்ந்துள்ளது.
Always all ears when the great @msdhoni talks! #TeamIndia | #ENGvIND pic.twitter.com/YKQS8taVcH
— BCCI (@BCCI) July 9, 2022
'Keeping' in touch with the Youngbloods! #ENGvIND #WhistlePodu
— Chennai Super Kings (@ChennaiIPL) July 9, 2022
: @BCCI pic.twitter.com/LRVsK7GpdJ
டோனி இந்த வார தொடக்கத்தில் ரபேல் நடால் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் இடையேயான விம்பிள்டன் காலிறுதிப் போட்டியைக் காண இங்கிலாந்துக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.