இந்தியா- அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு !

இந்தியா- அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-26 07:29 GMT

screengrap from video tweeted by @irelandcricket

டப்ளி,

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில், போட்டி மழையால் பாதிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அயர்லாந்து நேரப்படி மாலை 4:30 மணிக்கு 97 சதவீதம் மேக மூட்டம் இருக்கும் என்றும், இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை 1 மிமீ மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 10:30 மணி அளவில் மழைக்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால், ஆட்டம் எந்த அளவு பாதிப்படையக்கூடும் என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்