ஒரே போட்டியில் 2 அணியின் கேப்டன்களுக்கும் அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...காரணம் என்ன..?

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - சென்னை அணிகள் மோதின.

Update: 2024-04-20 08:13 GMT

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பு ஐ.பி.எல். சீசனின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து ரூ. 12 லட்சம் அபராதமாக அறிவிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து ரூ. 12 லட்சம் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்