ஐ.பி.எல். : ராஜஸ்தான் அணியில் இருந்து முக்கிய சுழற்பந்து வீச்சாளர் விலகல்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஆடம் ஜம்பா விலகியுள்ளார்.;
image courtesy: PTI
மும்பை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான அவரை ராஜஸ்தான் அணி ரூ.1.5 கோடிக்கு தக்க வைத்திருந்தது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.