ஐ.பி.எல்.; சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன...?

சென்னைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

Update: 2024-03-27 10:09 GMT

குஜராத் டைட்டன்ஸ் 

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்