ஐ.பி.எல். கோப்பை சி.எஸ்.கே.வை மட்டும் வீழ்த்தி பெறுவது அல்ல - பெங்களூருவை விமர்சித்த ராயுடு

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.

Update: 2024-05-23 06:20 GMT

புதுடெல்லி,

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வியடைந்து வெளியேறியது.

முன்னதாக சென்னை - பெங்களூரு இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில், பெங்களூரு வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனை பெங்களூரு வீரர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். அந்த போட்டியின்போது வர்ணனையாளர் பிரிவில் இடம் பெற்றிருந்த சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பெங்களூரு அணியை அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு:- "ஐபிஎல் கோப்பைகள் கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை. ஐபிஎல் கோப்பை சி.எஸ்.கே.வை வீழ்த்தி பெறுவது அல்ல. ஐ.பி.எல். கோப்பையை வெல்ல நீங்கள் பிளே ஆப்களில் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்